Thursday, December 20, 2012

வடமாராட்சி கிழக்கு மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த ஈ.பி.பி.டி

வடமராட்சி கிழக்கில் ஈ.பி.டி.பி யினால் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமானதும் முறை கேடனதுமான மண் அகழ்விற்கு எதிராக பேராட்டம் நடத்தி வரும் வடமராட்சி கிழக்கில் பொது மக்களுக்கும் ஊர் பிரமுகர்களுக்கு ஈபிடிபி பிரமுகரொருவர் பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்படி பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஈபிடிபி சார்பு மகேஸ்வரி நிதியம் வாகனங்களை பொது மக்கள் உள்நுழைய அனுமதி மறுத்து வருவதுடன் குடியிருப்புகளிடையே மணல் முறையற்று அகழ்வதால் குடியிருப்புக்கள் கடல் நீரால் மூழ்கடிக்கப்படலாம் எனவும் எச்சரித்து வருகின்றனர்.


இந்நிலையில் முறையற்ற மணல் அகழ்வு தொடர்பில் உரியநடவடிக்கை எடுக்க கோரி யாழ்.அரச அதிபர் மற்றும் மணல் அகழ்விற்கான இடங்களை ஒதுக்கி வழங்கும் நில அளவைகள் சுரங்கங்கள் பணியகத்திடமும் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் யாழ்.அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமுக நிலை எட்டப்படாத நிலையிலேயே மகேஸ்வரி நிதிய பணிப்பாளர் மக்கள் பிரதிநிதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

'ஒருவரும் உயிருடன் இருக்க மாட்டீர்கள் இனிமேல் எவரேனும் வீதிகளில் இறங்கிப்பாருங்கள் நடப்பது என்னவென தெரியுமென' பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment