அரசின் வசமுள்ள பேலியகொடை நகர சபையின் வரவு செலவு திட்டமும் தோல்வி
அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள பேலியகொடை நகரசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஆளும் கட்சி உறுப்பினர்களே எதிர்த்து வாக்களித்தால் தோல்வியடைந்துள்ளது. இச்சபையில் ஆளும் கட்சியின் வரவு செலவுத திட்டம் வரலாற்றில் முதற்தடவையாக இந்த நகரசபையில் தோல்வியடைந்துள்ளது.
திட்டத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதேவேளைஇ ஐக்கிய தேசிய கட்சியினைச் சேர்ந்த மூவரும் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
திட்டத்துக்கு ஆதரவாக மூன்று வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தன.
இதேவேளை அண்மையில் இன்னொரு சபையிலும் அரசாங்கம் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்திருந்தது.
0 comments :
Post a Comment