Thursday, December 27, 2012

காலையில் வான் பாய தயாரானது இரணைமடு மக்களுக்கு எச்சரிக்கை!

இரணைமடுக்குளத்தின் நீர்த்தேக்க நீரின் அளவு இரவு ஒன்பது மணி தகவல்களின் படி 33 அடியாக கானப்படுகிறது இந்த நிலையில் குளத்தின் அனைத்து வான்கதவுகளும் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளதுடன் மழை நீடித்தால் இரணைமடு குளம் வான் பாயும் என கிளிநொச்சி நீர்ப்பாசனத்திணைகளத்தின் பிரதிப்பணிப்பாளர் சுதாகரன் குறிப்பிட்டதுடன் தற்போது இரணைமடுக்குளத்திற்கு ஒரு செக்கனுக்கு 15,223 கன அடி நீர் உள்வருவதோடு ஒரு செக்கனுக்கு 10,262 கன அடி நீர் வெளியேறுவதுடன் தற்போது குளத்தின் நீர்கொள்ளலவு ஒரு இலட்சம் ஏக்கர் அடியாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்ந்தும் நீடித்துக்கொண்டு இருந்தால் குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்து குளத்தின் நீர் மட்டம் 34 அடியாக உயரும் போது அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறந்துவிடப்பட்டு நீர் வெளியேறுகின்ற அதேவேளை வான் பாயும் நிலைமையும் ஏற்படலாம் என நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் சுதாகரன் அவர்கள் தெரிவித்தார்.

இவ்வாறான நிலமை ஏற்பட்டு வான் பாய்கின்றபோது தற்போது வெளியேறுகின்ற நீரின் அளவினை விட இரண்டுமடங்கு நீர் வெளியேறும் என்பதால் இரனைமடுகுளத்தின் கீழான நீரேந்து பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசிக்கும் மக்கள் அவதானமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com