பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணையைத் தொடருங்கள்- தெரிவுக்குழுவிடம் ஜனாதிபதி
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான விசாரணையை தெரிவுக்குழு தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபஷ அறிவுறுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.பிரதம நீதியரசர் விசாரணையை பகிஷ்கரித்தாலும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் விசாரணையைத் விடாமல் தொடர வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கூட்டமைப்பின் பங்காளிகளுக்கு கூறியுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.
எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அவசர அவசரமாக ஆளும் கட்சி பங்காளிகளுடன் ஜனாதிபதி நடாத்திய கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளாதாகத் தெரியவருகின்றது.
கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையிலிருந்து பிதரம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, வெளியேற தீர்மானித்த பின் உருவாகியுள்ள நிலைமை பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சுமார் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்த இந்த விளக்கமளிப்பின் போது, புதிய நிலைமையை வைத்துக்கொண்டு சர்வதேச சமூகத்தில் சில பிரிவினர் இலங்கை மீது குறை காணக்கூடுமோ என ஜனாதிபதி விசனம் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
0 comments :
Post a Comment