சுவீடனில் கடும் பனிப்பொழிவு முக்கிய நகரங்களில் விமான சேவைகள் முடங்கின
சுவீடனில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு காணப்படுகிறதால் தலைநகர் ஸ்டாக்ஹோம் உள்பட பல நகரங்கள் பனியில் மூடியுள்ளன. நேற்று முன்தினம் முதல் பனிப்புயல் வீசியதால் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால். முக்கியமாக விமான நிலையம் ஸ்தம்பித்ததால், ஸ்டாக்ஹோம் விமான நிலையத்துக்கு வரவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
எனவே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வர இயலாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நோபல் பரிசு வழங்கும் நிர்வாகிகள் கூறுகையில், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் நேற்று வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கேற்ப இங்கு பல்வேறு கருத்தரங்கு, மாநாட்டு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஆனால், பனிப்பொழிவு காரணமாக தாமதமாகிறது என்றனர்.
கடும் பனிப்புயல் காரணமாக சுவீடனின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோபல் பரிசு பெற வந்தவர்களும்; அவதிப்படுகின்றனர்.
பரிசளிப்பு விழா வருகிற 10ஆம் திகதி நடக்கிறது. அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், 20 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரித்துள்ளனர். வழக்கத்துக்கு மாறான பனிப்பொழிவால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
0 comments :
Post a Comment