யாழ்.மாநகர சபை முன்னாள் உறுப்பினர் நிஷாந்தனின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்
யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.நிஷாந்தனின் வீட்டின் மீது இன்றிரவு கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற் கொள்ளப்பட்டுள்ளது.இன்றிரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது எந்தவிதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment