மறைந்த முன்னால் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு !!
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே குஜ்ராலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு என்று தெரிகிறது.நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல் நான்கு நாட்களுக்கு சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டு அனுமதிக்கு எதிர்கட்சிகள் மற்றும் இடது சாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி வந்தன.
கடந்த வெள்ளி அன்றுதான் மத்திய ஆரசு FDI தொடர்பான சிறப்பு விவாதத்துக்கும், பொது வாக்கெடுப்புக்கும் சம்மதம் தெரிவிக்க நாடாளுமன்றம் சுமுகமாக நடைப்பெற்றது. இந்நிலையில் முன்னாள் இந்திய பிரதமர் ஐ கே குஜரால் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். மறைந்த முன்னாள் பிரதமருக்கு இன்று நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் 2 நிமிடம் மவுன அஞ்சல் செலுத்திய பிறகு இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இனி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை சுமுகமாக நடைபெறும் என்றும், நாளை மற்றும் நாளை மறுநாள் FDI பற்றி சிறப்பு விவாதம் மற்றும் பொது வாக்கெடுப்பு இருக்கும் என்றும் தெரிய வருகிறது.
0 comments :
Post a Comment