பாராளுமன்றில் எதிரணி பக்கம் ஒடி விளையாடிய அமைச்சர் மேவின் சில்வா
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு அமைச்சர் மேர்வின் சில்வா சபைக்கு நடுவாக எதிரணியின் பக்கத்திற்கு செல்வதற்கு முயற்சித்த வேளையிலேயே சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
தெரிவுக் குழவின் விசாரணை அறிக்கை நேற்று பாராளுமன்றில் குழுவின் தலைவர் அனுரபிரியதர்ஷன யாப்பாவினால் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையினை அமைச்சர் சமர்ப்பித்த போது அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிரணி உறுப்பினர்களை ஏசியவாறே அமைச்சர் மேர்வின் சில்வா சபைக்கு நடுவே ஓடினார்.
விரைந்து செயற்பட்ட படைக்கல சேவிதர்கள் அவரை எதிரணியின் பக்கமாக செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment