அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு முன்னர் முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு முன்னர் அதற்குரிய முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் அதற்குரிய மறுநடவடிக்கைகளை மேற்கொள்வதில் எவ்வித பயனுமில்லை என பாதுபாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இணையதகவல்(சைபர்) பாதுகாப்புக்கான 5ஆவது வருடாந்த தேசிய மாநாடு நேற்று(டிச-05) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுது. இதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு தலைமையுரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், தற்காலத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. எனவே இணையதகவல்கள் பாதுகாப்புத் தொடர்பான அறிவை விஸ்தரிப்பது மிக முக்கியமானதொன்றாகும். ஏற்படவிருக்கும் அனைத்து முக்கிய அபாயங்களுக்கும் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும் என தெரிவித்தார்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றுகின்றது. எனவேதான் அரசாங்கமானது இடைநிலை மற்றும் உயர்கல்வி மாணவர்களிடையே தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ரீதியிலான விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் தொடர்பான அறிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியதுவம் தொடர்பாகவும் தெளிவூட்டினார்.
இந் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பிரபல அதிகாரிகள், தொழில்சார் மற்றும தொழில்முறை சார் வல்லுனர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
நன்றி விடிவு
0 comments :
Post a Comment