மருத்துவத் தாதி ஜெசிந்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்தமை நிரூபணம் !!
கேட் வில்லியம்ஸின் உடல் நிலை தொடர்பாக வானொலி ஒன்றிட்கு தகவல் வழங்கிய மனவருத்தத்தால் மருத்துவதாதி தற்கொலை செய்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசியார் கேட் வில்லியம்ஸின் உடல் நிலை குறித்தும் சிகிச்சைகள் உட்பட சில தனிப்பட்ட விடயங்கள் குறித்தும் அறியாமையால் அவுஸ்திரேலிய வானொலி நிலையம் ஒன்றிட்குத் தகவல் வழங்கிய மனவருத்தத்தால் தாதி ஜெசிந்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது நீதி மன்றத்தில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக 3 கடிதங்களும் சிக்கியுள்ளன.
ஜெசிந்தா இளவரசி கேட் தொடர்பாக குறித்த அவுஸ்திரேலிய வானொலிக்குத் தகவல் அளிக்கக் காரணம் டிசம்பர் 4 ஆம் திகதி குறித்த வானொலி நிலையத்தைச் சேர்ந்த Michael Christian மற்றும் Mel Greig எனும் இரு அறிவிப்பாளர்கள் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் சார்ள்ஸ் மற்றும் எலிசபெத் மகாராணியார் போன்ற குரலில் அவர்களைப் போன்றே பேசி இளவரசி கேட் இன் உடல் நலம் குறித்த தகவல்களைக் கேட்டதனால் ஆகும். மேலும் இத்தவறு குறித்து அறிய வந்த போது செய்வதறியாமல் அவர் வருத்தமுற்று தற்கொலை செய்துள்ளார்.
46 வயதாகும் ஜெசிந்தா திருமணமானவர் என்பதுடன் அவருக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். மேலும் அவர் இலண்டனில் உள்ள கிங் எட்வார்ட் VII வைத்தியசாலையில் பல வருடங்களாக நர்ஸாகக் கடமையாற்றி வந்தவர் ஆவார். இவர் குறித்த இந்த தொலைபேசி அழைப்பு வாயிலாக அரச குடும்பச் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததால் மனமுடைந்து தனது அறையில் வெள்ளிக்கிழமை 7 ஆம் திகதி தூக்கிட்டுத் தற்கொலை முயற்சி செய்தார்.
எனினும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் பயனில்லாமல் மரணமடைந்தார். பிரேத பரிசோதனையில் போது இவரின் கழுத்து, மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் காயம் இருந்ததாகச் சொல்லப் பட்டுள்ளது.
இந்நிலையில் இவர் கைப்பட எழுதிய இரு நோட்டுக்கள் அவரின் அறையிலும் இன்னொன்று அவரின் உடைமைகளில் இருந்தும் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதில் உள்ள விபரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப் படவில்லை.
இதேவேளை ஜெசிந்தா தகவல் அளித்த அவுஸ்திரேலிய வானொலி நிலையத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட இரு அறிவிப்பாளர்களும் இச்சம்பவத்தால் தமது இதயம் உடைந்து போய் விட்டது எனவும் இவ்வாறு நிகழும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளனர். மேலும் இவ்வானொலி நிலையம் இன்னும் ஒரு வருடத்துக்கு விளம்பரங்கள் மூலம் தான் சேகரிக்கும் பணத்தை ஜெசிந்தாவின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment