Wednesday, December 26, 2012

முதலாவது மாதாந்த சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகள்

இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் யுவதிகளுக்கு முதல் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ் பெண்களை இராணுவத்தில் இணைத்தது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகளும் அமைப்புக்களும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையிலேயே இவர்களுக்கான முதல் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட படி சுமார் 33 ஆயிரம் ரூபா வரையில் முதல் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இராணுவத்தில் இணைக்கப்பட்டு பயிற்சியின் ஒரு மாதத்தை பூர்த்தி செய்துள்ள தமிழ் பெண்கள் இராணுவ வாழ்வுக்கு தம்மை பழக்கப்படுத்தின் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு இவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் பயிற்சியை முன்னெடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

3 comments :

Anonymous ,  December 26, 2012 at 3:50 AM  

அழிவுகள், அபலைகள், ஆபத்துகள், இழப்புக்கள், பசி, பட்டினிகள், பரிதவிப்புக்கள் என்று மூன்று வருடங்கள் முடிந்தும் ஒரு டொலர், ஏன் ஒரு நேர உணவு கூட புலம்பெயர் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளாத தமிழீழ தாயக தமிழர், தமிழ் மகள்கள் , தமிழ் குழந்தைகள் தனது குடும்ப நலனுக்காக, தன்னலம் கருதாது, தனது வாழ்வையே அர்ப்பணித்து, எதிரியாகிய இராணுவத்தில் சேர்ந்து, முதல் மாத சம்பளமாக வெறும் 33 ஆயிரம் ஸ்ரீலங்கா ரூபாய்கள், அதாவது 25 டொலர்கள், புலம்பெயர் நாடுகளில் வாழும் புலிப்பினாமிகளுக்கும், புலிஊடகங்களுக்கும், புலிக்கொடி பிடித்து, ஊர்வலம் நடத்தி, உண்ணாவிரதமிருந்து, உண்டியல் குலுக்கி, புலிகளுக்கு ஆயுதம் வாங்க மில்லியன், பில்லியன் டொலர்கள் கணக்கில் கொடுத்த, உதவிய தமிழீழ மகா (அறிவு?) தமிழ் உணர்சியாளர்கள், தத்துவஞானிகள், அறிவாளிகள், அறிவுக்கொழுந்துகள், தமிழ் பத்திரிகைகள், தமிழ் வானொலிகள், தமிழ் டிவி கள், புலம்பெயர் நாட்டு பல்கலை தமிழ்மாணவர்களுக்கு தமிழீழ சமர்பணமாக அமையட்டும்.

Anonymous ,  December 26, 2012 at 1:08 PM  

It's great and brave to start with a devoted career.but if you work for someone or some establishments in God's name,work for him work for the establishment that you represent in God's name which provides you wages that meets your livlihood, work for him stand by him.Stand by the establishment that you represent.God will bless you.Give a deaf ear to unnecessary remarks.

Anonymous ,  December 27, 2012 at 2:17 AM  

புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கும், புலிஊடகங்களுக்கும், புலிக்கொடி பிடித்து, ஊர்வலம் நடத்தி, உண்டியல் குலுக்கி, புலிகளுக்கு ஆயுதம் வாங்க மில்லியன், பில்லியன் டொலர்கள் கணக்கில் கொடுத்த, உதவிய தமிழீழ மகா உணர்சியாளர்கள், தத்துவஞானிகள், அறிவாளிகள், அறிவுக்கொழுந்துகள், தமிழ் பத்திரிகைகள், தமிழ் வானொலிகள், தமிழ் டிவி கள், தமிழ்மாணவர்களுக்கு தமிழீழ சமர்பணமாக 33 ஆயிரம் ரூபா அமையட்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com