இரணைமடு விமானத்தளத்திற்கு ஆனது என்ன தெரியுமா?
கிளிநொச்சி இரணைமடுக்குளம் வற்றிவிட்டதால் இம்முறை சிறுபோக விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக வெளியான சில செய்திகளில், குளம் வற்றியமைக்கு இராணுவத்தினரே காரணம் என்று சில தமிழ் பத்திரிகைகள், இணையத்ளங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இன்று 34 அடிக்கு மேல் தண்ணீர் வந்து வான்பாயும் நிலையில் ஏன் இன்னும் இந்த இணையத்தளங்களும் பத்திரிகைகளும் விமானப்படைத்தளம் அழிந்து விட்டது என செய்திகளாகவோ அல்லது கட்டுரைகளாகவே பிரசுரிக்க வில்லை என கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.விகிர்தன் தெரிவித்தார்.
வன்னியைப் பொறுத்தளவில் ஒவ்வொரு வருடமும் காலபோகம், சிறுபோகம் என இரண்டு போகங்களாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலபோகம், பருவகால மழையை நம்பிச் செய்யப்படுவது. சிறுபோகம் குளத்திலிருந்து கிடைக்கும் நீரை நம்பியே செய்கின்றனர்.
ஒவ்வொரு சிறுபோகத்தின்போதும், குளத்தின் நீர் மட்டம் எந்தளவு இருக்கிறது, இதைக்கொண்டு எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என திட்டக்குழுவின் வழிகாட்டலின்படியே பயிர் செய்கை மேற்கொள்ளப்படும், இதற்குத் தேவையான நீர் இரணைமடுக் குளத்திலிருந்து விவசாயிகளுக்குக் கிடைப்பதுடன் கூடவே, கோடை மழையும் பெய்யும்போது நெற்செய்கைக்கு எவ்வித பாதிப்புமின்றி சிறப்பாக மேற்கொள்ளப்படுவது வழமை.
ஆனால் கடந்த வருடம் கோடைகால மழை வீழ்ச்சி இல்லாததால் நாட்டில் நிலவிய கடும் வரட்சியின் காரணமாக இரணைமடு மட்டுமின்றி பல குளங்கள் வற்றியது ஆனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டார்.
இவ்வாறான வறட்சியின் நிலையிலும் இரணைமடுக்குளத்திற்கு கீழ்செய்கைபண்ணப்பட்ட நெற்பயிர்ச்செய்கைக்கு சூழற்சி முறையில் நீர் வளங்கப்பட்டது ஆனால் இதனை சரியாக விளங்கிக்கொள்ளாத நாட்டிலேயே இல்லாத சில மூத்த ஊடகவியலாளர்கள் இங்கிருந்து சொல்லும் ஒரு சில தகவலை மட்டும் வைத்துக் கொண்டு தமக்கு வந்தபடி செய்திகளை பிரசுரிக்க! செய்திக்காக காத்திருக்கும் ஊடகங்கள் அதனை அப்படியே தமது பத்திரிகைகளில் பிரசுரித்து மக்களின் மனதை புன்படுத்தியதாலேயே கோடைகாலத்தில் இரணைமடு தொடர்பில் வந்த வதந்திகளுக்கு காரணம் எனதெரிவித்தார்.
ஆனால், கடந்த சிறு போக பயிர்ச்செய்கை திட்டக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை கடைப்பிடிக்காத சில விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட 8,000 ஏக்கர்களைவிட மேலதிகமாக 4,000 ஏக்கர்களில் முன்னனுமதியின்றி நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதால் 12,000 ஏக்கர்களுக்கு வழங்குவதற்கான நீர் இரணைமடுக்குளத்தில் இல்லாதால் வயல்கள் தொடங்கின.
இரணைமடுக்குளத்தில் கிடைப்பனவாக இருக்கக்கூடிய நீருக்கு மேலதிகமாக, அனுமதியின்றி விவசாயத்தில் ஈடுபட்டவர்களால் நெற்செய்கை இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்க, நம்முடைய பத்திரிகைகள் சில, முந்திக்கொண்டு இரணைமடுக்குள நீர் வற்றியமைக்கு இராணுவத்தினரே காரணம் என்று செய்தி வெளியிட்டிருந்தன.
இரணைமடுக் குளம் அமைந்துள்ள பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு அது இராணுவமயப்பட்டிருப்பது என அடிக்கடி தமிழர் தரப்புக்களால் சுட்டிக்காட்டி தமது கண்டனத்தை தெரிவிக்கின்றனர் ஆனால் முன்னர் புலிகளுடைய காலத்திலும் இரணைமடுக் குளத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் அங்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்ததும் தெரிந்ததே.
ஆனால் இணைய ஊடகங்களும், அதனை முந்திக்கொண்டு பிரசுரிக்கும் பத்திரிகைகளும் சற்று சிந்தியுங்கள் இரணைமடு விமானைப்படைத்தளம் என்பது இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதியில் காணப்பட வில்லை என்பதும் இது இரணைமடுக்குளத்தில் இருந்து 23 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கல்மடுக்குளத்தின் மேற்பகுதியிலேயே காணப்படுவதனை அனைவரும் அறிந்துவேண்டும் என குறிப்பிட்துடன் தேவைப்பட்டால் அதனை நீங்கள் உங்களது கணினியில் பார்க்க முடியும் எனக்குறிப்பிட்டார்.
கடந்த வரட்சிக்காலத்தில் இதுதான் அரணைமடுக் குளத்தின் வான் கதவுகளுக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாம் இதற்காகத்தான் குளத்தின் நீர் துறந்து விட்டதாக பத்திரிகையிலும் இணையங்களிலும் வந்திருந்து கட்டடங்கள் நீங்களே பாருங்கள் தற்போது கூட நீர் இன்னும் கூட முகாமுக்குள் போகவேயில்லை ஆதாரத்துடன் எமக்கு குறிப்பிட்டார்.
எனவே ஊடகங்கள் தமது வாசகர்களுக்கு செய்தியை வளங்கும் போது சரியான செய்தியை வளங்க வேண்டுமே தவிர மக்களை குளப்பம் அடைய செய்து அதில் தமது வியாபாரத்தையும், அரசியலை செய்யக்கூடாது எனக்குறிப்பிட்டதுடன் புலம்பெயர் ஊடகவியலாளர்கள் தமக்கு கிடைக்கும் யூறோவுக்காகவும், தமது அகதி அந்தஸ்தை நிலைநாட்ட தமிழ் மக்களை குழப்ப வேண்டபம் எனக்குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment