இந்தியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு இலங்கை விஜயம்?
இந்திய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவொன்று எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடி வருவதாகத் தெரியவருகின்றது. இக்குழவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழுவினர் யார்? ஏன்? இவர்கள் வந்துள்ளனர் போன்ற விடயங்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருவதாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment