பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் - எதிர்கட்சிகள்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்றக் குற்றப் பிரேரணை தொடர்பில் சுயாதீன குழுவை அமைத்து காலத்தை வீணடிக்காமல் குற்றப்பிரேரணையை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே எதிர்கட்சி உறுப்பினர்களான கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி, புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திரா,புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, ஜனநாயக மக்கள் முன்னணியின் உபசெயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான குகவர்தன் ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
குற்றப்பிரேரணையில் 14 குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஐந்து குற்றச்சாட்டுகளை மட்டும் அவசர அவசரமாக தெரிவுக்குழு விசாரித்தது ஏன்?
குற்றப்பிரேணையை விசாரித்த தெரிவுக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக சுயாதீன குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருப்பதன் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த தெரிவுக்குழுவில் நம்பிக்கையிழந்துள்ளர் என்றே அர்த்தப்படுகின்றது.
தெரிவுக்குழு விசாரணையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளமை எதிரணியான எமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
திவிநெகும சட்டமூலத்தின் மூலமாக பெருந்தொகையான பணத்தை கொள்ளயடிக்க முடியாததை அடுத்தே இந்த குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.
தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிரணியினர் அக்குழுவிலிருந்து வாபஸ்பெற்றதையடுத்து சுமார் 12 மணிநேரத்திற்குள் 16 பேர் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தமை எவ்வாறு என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
0 comments :
Post a Comment