Friday, December 14, 2012

கொழும்பில் பெரும்பாண்மையாகி வரும் தமிழ், முஸ்லிம்கள்!!

தலைநகர் கொழும்பில் சிங்களர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளகவும் அதேசமயம், தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறதாகவும் சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.அத்தகவல்களின் பிரகாகரம் முஸ்லிம்கள் முதலாமிடத்தில் (1,26,345 - 40 சதவீதம்) இரண்டாமிடத்தில் தமிழர்கள் (1,06,325 - 33 சதவீதம்) மூன்றாம் இடத்தில் சிங்களவர்கள் (79,468 - 24 சதவீதம்) உள்ளனர்.

மேற்படி தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த 1971ம் ஆண்டு கணக்குப்படி கொழும்பில் சிங்களர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருந்தது. 2001 கணக்குப்படி இது 41 சதவீதமாக இருந்தது. தற்போது அடியோடு குறைந்து போய் விட்டது.

இது கொழும்பு நகர்ப்புற கணிப்பாகும். ஆனால் புறநகர்ப்பகுதிகளின் பெரும்பாண்மையினரே பெரும்பாண்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  December 14, 2012 at 11:33 AM  

This clearly indicates the genuine role of a country which treats all its citizens democratically equal

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com