Saturday, December 8, 2012

யாழ்.பல்கலைக்கழக விவகாரம் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்ப தீர்மானம்

கைது செய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தரையாடவுள்ள அதேவேளை ஜனாதிபதிக்கும், உயர்கல்வி அமைச்சருக்கும் மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கலாக புதிதாக நியமிக்கப்படவுள்ள குழுவினரே இம்மகஜரை அனுப்பி வைக்கவுள்ளனர். என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


யாழ். பல்கலைக்கழத்தில் மாணவர்களின் விடுதலை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றினை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் நேற்று காலை மேற்கொண்டுள்ளனர்.

இக்கலந்துரையாடலின் போது, மாணவர்களை விடுதலை செய்வது குறித்து பல்கலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து குழு ஒன்றினை நியமித்து அதனூடாக மாணவர்களின் விடுதலை குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாணவர்களின் விடுதலை குறித்து இங்கு பல்வேறு தரப்பினர்களுடனும் கலந்துரையாடிய போதிலும் எந்தவிதமான பயனுமில்லாத நிலையிலும், பல்கலைக்கழக நிர்வாகம் தகுந்த அதிகாரிகளுடன் இறுக்கமான முடிவுகளை எடுக்க தயங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com