பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணையால் அமெரிக்கா விசனமடைந்துள்ளது- தூதரம் அறிக்கை
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் வெளிப்படையான விசாரணையையும் சட்டத்தின் ஆட்சிக்கு அமைய அது நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிடமே அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நீதித்துறையின் நிலைமை குறித்தும் பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை குறித்தும் அமெரிக்கா மிகவும் விசனமடைந்துள்ளது.
எனவே பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் வெளிப்படையான விசாரணையையும் சட்டத்தின் ஆட்சிக்கு அமைய அது நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற தெரிவிக்கு குழுவிலிருந்து எதிர்கட்சிகள் வெளியேறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
2 comments :
i have a doubt, who is president of Sri lanka ? Mr. Rajapakse or Mr. Obama ? is Sri lanka ruled by USA Embassy or by Sri Lankan Parliment which elected by true Srilankans ?
It's funny this particular country and its allied countries believe that they are the overroll controllers of the whole world for ever and ever.Democracy says each independent country has its own soverignity.This is only theoritical
but practically not.
Post a Comment