இந்து பூசகர்கள் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தனர்.
இந்து கோயில்களை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கண்டறியும் வகையில் ஜனாதிபதி நேற்று இந்து பூசகர்கள் மற்றும் நிருவாக சபையினரை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். இச்சந்திப்பில் இனங்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதே பிரச்சினைகளை தீர்க்க சிறந்த வழியென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் சமயத்தை முறையாக பின்பற்றுவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு வாழக்கூடிய சூழலை கட்டியெழுப்புவது சகலரினதும் பொறுப்பென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதுடன் கோயில்களுக்காக உதவி நிதியும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
இச்சந்திப்பில் பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment