Saturday, December 29, 2012

ஈழத்துச் சிதம்பரத்திற்கு காவடி எடுத்துச் சென்றவர் நடுவழியில் மயங்கி மரணம்

காரைநகர் ஈழத்துச் சிதம்பம் சிவன் கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பால்காவடி எடுத்த வயோதிபர் ஒருவர் கோயிலுக்கு செல்லும் இடைவழியில் மயங்கி வீழ்ந்து பரிதாபகரமாக மரணமாகியுள்ளார். இச்சம்பவம் தீர்;த்த உற்சவமான நேற்று இடம்பெற்றுள்ளது.இதில முன்னாள் ஆசிரியருமான தற்போது வர்த்தகருமாயுள்ள எஸ்.சபாநடேசன் (வயது 55) என்ற வயோதிபரே மரணமானவராவார்.

காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோவிலிலிருந்து ஈழத்துச் சிதம்பரம் நோக்கிச் புறப்பட்ட இவரது காவடி இடைவழியில் செல்லும் போது மயக்கமடைந்துள்ளார்.

காரைநகர் வைத்தியசாலைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனளிக்காது மரணமாகியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com