தோனி, விராத் கோலி நிதானமான துடுப்பாட்டம் !!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நடைபெற்று வரும் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 330 ஓட்டங்களை பெற்றிருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் சாவ்லா 4 விக்கெட்டுக்களையும் ஷர்மா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தற்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் மாலை நேர தேநீர் இடைவேளை வரை 227 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
இன்று காலை தொடக்கம் களத்தில் நிற்கும் தோனி, விராத் கோலி இருவரும் இணைந்து 150 ரன்களுக்கு மேலான இணைப்பாட்டத்தையும் கடந்தனர். தற்சமயம் விராத் கோலி 80 ஓட்டங்களுடனும் தோனி 78 ஓட்டங்களுடனும் களமாடி வருகின்றனர்.
ஏற்கனவே இரு போட்டிகள் வென்று 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிப்பதால், இப்போட்டியை இந்தியா சமநிலைப்படுத்தினாலும் தொடரை இங்கிலாந்தே வென்று புதிய வரலாற்று சாதனை படைக்கும்.
எனவே அதை தடுப்பதற்கு இந்தியா இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment