Wednesday, December 5, 2012

யாழ்பாணத்தில் என்ன நடக்குதென்று சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு தெரியாதாம்.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பெண்கள் பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பில் சிக்கல் ஒன்று நிலவுகின்றதாக மக்கள் பேசுகின்றனர். இந்நியமனத்திற்கு பொருத்தமானவர் சாதிய அடிப்படையில் ஒதுக்கப்படுவதாகவும் அங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற ஒருவர் சார்பாக தமிழ் அழகன் என்பவர் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனை சந்தித்து நிலைமைகள் தொடர்பில் விளக்கியுள்ளார். தமிழ் அழகனின் கூற்றுக்களுக்கு செவிமடுத்த சுரேஸ் பிறேமச்சந்திரன் இது விடயம் தொடர்பில் தான் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று கூறினாராம்.

தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எல்லைக்குள் இடம்பெறுகின்ற இவ்வாறான முக்கியமான விடயங்களைக்கூட அறிந்திராதவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக தொடர்ந்தும் நிலைக்க முடியுமாக என்ற இங்கு எழுப்பப்படுகின்றது.

1 comments :

Anonymous ,  December 5, 2012 at 5:21 PM  

Department of Education has the right to appoint a person who is academically qualified and suitable
for the post and not looking into racial discrimination.This is type of
discriminations are completely wiped out,during the past decades.So why the Dept Edu is struggling to appoint a suitable person....?Are they following the strong south indian culture....?
Some politicians are opportunists,they know how to escape when to escape from the important scenes

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com