Wednesday, December 19, 2012

மகளையும் கொடுத்து, படுக்கவிட்டு காவலும் பார்க்கவேண்டுமாம். த.தே.கூ அராஜகம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக்கப் வாகனம் நேற்று அதிகாலை 1.30 மனியளவில் தீவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தவிசாளரின் மத்திய முகாம் 11ம் கொலனி வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சி. குணரத்தினம், இப் பிரதேச சபைக்கு தவிசாளராக என்னை நியமித்ததை தாங்கமுடியாமல் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சபை உறுப்பினர் ஒருவரின் குழுவினரே இந்த நாசகார வேலையை செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த குணரட்ணம் தான் பிரதேச சபையின் வாகனத்தை வீட்டிற்கு கொண்டு சென்று அதை வாசலில் நிறுத்திவிட்டு வாகனத்திற்கு காவலுக்கு தனது மாமனாரை இருத்திவிட்டு தூக்கத்திற்கு சென்ற பின்னர் இவ்வாறு தீயிடப்பட்டதாக கூறியுள்ளார்.

பாவம் மனிஷன் மகளையும் கொடுத்து , படுக்கவிட்டு காவலும் பார்க்கவேண்டும்.


இதுதான் இன்று தமிழ் மக்களின் தலைமைகளின் சீத்துவம், பதவி கிடைத்தவுடன் சொந்த மாமனுக்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலைமையை நாம் இன்னும் சொல்ல வேண்டுமா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை நியமனங்கள் தொடர்பில் வடகிழக்கு பூராகவும் சகல சபைகளிலும் குழப்பங்கள் நிலவுகின்றது. நியமனங்களுக்கு எதிராக கட்சிக்காரார்கள் போர்கொடி தூக்கியுள்ளதுடன் அவர்கள் தங்களுக்குள் அடிபடும்போது சபைகள் இயங்கா நிலையில் மக்கள் அவதியுறுகின்றனர்.

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளராக குணரட்ணம் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சபையின் உறுப்பினரான ஆனந்தன் தனது கடுமையான எதிர்ப்பை வெளிகாட்டியதுடன் மக்களை திரட்டி நியமனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது ஆனந்தனே தனது வாகனத்திற்கு தீயிட்டு கொழுத்தியது என வெளிப்படையாக தெரிவிக்கும் குணரட்ணம் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆனந்தனின் வீட்டிற்கு தீயிட முனைந்தபோது மூன்றாம் தரப்பு ஒன்று தலையிட்டு முயற்சியை தடைசெய்தாகவும் அறியக்கிடைக்கின்றது.

சம்பவம் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் மத்திய முகாம் பொலிஸில் முறையிட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனம் குணரட்ணத்தின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது தவறு என்றும் அரச சொத்துக்களை தவறாக இவர் பயன்படுத்தியுள்ளார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

No comments:

Post a Comment