Monday, December 10, 2012

எங்கள் பிள்ளைகள் மண்ணின் மடியில் உங்கள் பிள்ளைகள் மாடி வீட்டிலா?

சிறிதரனுக்கு எதிராக ஆர் ப்பாட்டம்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று கிளிநொச்சியில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றது. ஓன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது மற்றொன்று முன்னாள் புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் திரட்டப்பட்ட மந்தைகள் கூட்டமொன்று பஸ் ஒன்றில் கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்ததுடன் இவ்வார்ப்பாட்டத்தில் கிளிநொச்சியை சேர்ந்த எந்தவொரு மகனும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் முன்னாள் புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வார்ப்பாட்டத்தில் சிறிதரனுக்கு எதிரான கோஷங்களுடன் மக்கள் ஒன்று கூடினர். அங்கு 'எங்கள் பிள்ளைகள் மண்ணின் மடியில் உங்கள் பிள்ளைகள் மாடி வீட்டிலா..' , 'உங்கள் வயிறு வளர்க்க எங்கள் வயிற்றில் அடிக்காதீர்' என்ற சுலோகங்களை மக்கள் தாங்கி நின்றனர்.

இங்கு வியப்பிற்கு உரிய விடயம் யாதெனில் சிறிதரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருந்தோர் இலங்கை இராணுவத்தின் கைக்கூலிகளாம் என சிறிதரனின் தம்பியாரின் இணையமான தமிழ்வின் கூறுகின்றது.குறிப்பாக குட்டி , இரத்தினமணி ஆகியோரின் பெயர்களையும் அவ்விணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இவர்கள் புலிகள் அமைப்பின் நீண்டகால உறுப்பினர்கள் என்பதுடன் அவ்வியக்கத்தின் நிர்வாக துறையில் முக்கிய பங்காற்றியவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். அவ்வாறாயின் புலிகளை தமிழ்வின் இராணுவத்தின் கைக்கூலிகள் என்கின்றதா? புலிகள் எடுபிடிகள்தான் அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு மாறுவார்கள் என நாம் பல தடவைகளில் கூறிவந்திருக்கின்றோம். அந்தவகையில் எமது கருத்துக்களுடன் உடன்பட்டமைக்கு தமிழ்வின் க்கு நன்றி.

ஆனால் இன்று இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட புலிகள் தமிழிவின் கூறுவதுபோல் இராணுவத்தின் கைக்கூலிகள் அல்லர் எனவும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிதரன் போன்றோர் தொடர்ந்தும் மக்களை மந்தைகளாக்குவதை அனுமதிக்க முடியாத நிலையிலேயே தெருவிற்கு இறங்கினார்கள் என்றும் அவர்கள் தரப்பிலிருந்து நியாயம் கூறப்படுகின்றது.

மேலும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆர் ப்பாட்டத்தின்போது நிகழ்ந்திருக்கக்கூடிய இரத்தக்களறி பாதுகாப்பு படைகளின் தலையீட்டினால் தவிர்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திலிருந்து கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்த மந்தைகள் கூட்டத்தை புலிகள் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்தபோது படையினர் நிலைமைகளை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மந்தைகளை மேய்த்துவந்த குதிரைக் கஜேந்திரன் மற்றும் சிவாஜிலிங்கம் கோஷ்டியினருடன் இணையாமல் சிறிதரன் நகரசபை கட்டிடத்தினுள்ளேயே முடங்கி கிடந்தார். அவ்விடத்திற்கு சிறிதரன் வந்திருந்தால் நிச்சயம் நையப்புடைக்கப்பட்டிருப்பார் எனவும் ஆர் ப்பாட்டக்காரர்கள் பேசினர்.




1 comments :

Anonymous ,  December 10, 2012 at 10:35 PM  

People cannot be always illusioned
This demonstration clearly indicates they are able to distinquish bettween illusion and reality.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com