கண்டியில் முஸ்லீம்களுக்கு எதிராக அநாமதேய சுவரொட்டிகள்
கண்டி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகள் சிலவற்றிலும் உரிமை கோரப்படாத நிலையில் முஸ்லீம்கள் மக்களுக்கு எதிரான அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில் முஸ்லீம் இனத்திற்கு எதிரான வாசகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
'2025ல் இலங்கை சபரிஸ்தானாகும்', 'முஸ்லிம் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குவோமா?' உள்ளிட்ட வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் பொது மக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment