வாழ்வா சாவா என்ற பிரச்சனை இருந்த போது பதுங்கி இருந்தவர்கள் மக்களின் பிரச்சனைகளில் சம்பிருதாயத்திறகு கூட சம்பந்தப்படாதவர்கள் எல்லோரும் இன்று மக்களுடைய நியாயம் பேசுபவர்களாக வெளிக்கிட்டிருக்கிறார்கள். புலிகள் ஏற்படுத்திய பாசிச ஜனநாயக விரோத நிலைமைகள் மிக நீண்டகாலத்திற்கு தமிழ் சூழலை நச்சுப்படுத்தியுள்ளது.
புலிகள் இயக்கத்திலிருந்து உயிரைக் கொடுத்தவர்கள், வாழ்வைத் தொலைத்தவர்களுக்கெல்லாம் இன்று எவ்வித சமூக மரியாதையும் கிடையாது.
ஏனைய இயக்கங்களிலிருந்த போராளிகளுக்கு நேர்ந்த அவலத்தைபற்றி பற்றி கேட்கவே வேண்டாம். தமிழ் சமூகத்தின் ஆதிக்கவாதிகளின் மொழியில் அவர்கள் தீண்டத்தகாதவர்கள்.?? 26 ஆண்டுகள் வீதிகள் எல்லாம் மயானங்கள் ஆக்கப்பட்டகாலம் . தற்போது தமிழ் கூறும் நல்லுலகின்??; உள்ளுர் உலகப் பெருச்சாளிகளின் காலம்.
எல்லோருடைய உழைப்பபையும் , தியாகத்தையும், அழிவையும் தமது சொந்த சௌகரியத்திற்கு மூலதனமாக்கியிருக்கிறார்கள்.
உலகின் அனேகமான சுதந்திரப்போராட்டங்களின் தலைவிதிகள் இப்படித்தான் முடிவடைந்திருக்கின்றன.
நெஞ்சு பொறுக்குதில்லையே!
1970களின் முற்பகுதியில் இருந்ததை விட மோசமான நிலைமைகளில் தமிழர்கள் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைய நிலைமைகள், தலைமைகளுடன் ஒப்பிட்டால் நாம் கடந்தகாலத்தில் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்ற அதிர்ச்சி வெறுமை தான் மிஞ்சுகிறது.
இழக்கப்பட்டவற்றுக்கு நிகராக மக்கள் பெற்றது எதுவும் இல்லை. தீர்க்க தரிசனம் மிக்க தலைமைத்துவமும் இல்லை. களவாணிகள் தலைவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.
“பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள”; என்பது போல் ஊடகங்களும் அப்படித்தான்.
தமிழில் இலங்கையில் ஊடகங்கள் அரிது. பிரச்சார சாதனங்கள் இருக்கின்றன.
உண்மையை அறிவதானால் இலங்கை ஊடகங்களைப் படித்து ஒருவாய்பாட்டால் பிரிக்கவேண்டும்.
குறிப்பாக தமிழ் ஊடகங்கள் சமூக நல்லுறவிற்கான முயற்சிகளை எடுத்ததில்லை.
புலம்பெயர் ஆதிக்க சத்திகளின் விருப்பங்களை நிறைவேற்றும் எழுத்துக்களே ஆதிக்கம் பெறுகின்றன. இது தமிழ் கூறும் நல்லுலகின் ?? ஊடகங்களை பாரதூரமாகச் சேதப்படுத்தியுள்ளன.
புலம்பெயர் ஆதிக்க சத்திகளின் பொருளாதார தயவுகளுக்கான எழுத்துக்கள் அரசியல் என்பன புற்றீசல் போல் கிளம்பியுள்ளன.
அதற்கு இலங்கை வாழ் தமிழர்கள் பற்றி அவர்களின் துன்பமான வாழ்வு பற்றி நீலிக்கண்ணீர் அல்லது பாசாங்கான துயரம் மட்டுமே உண்டு.
புலிகளின் பணத்தைப் பங்குபோடுவதில் உயிர்ப்பலிகள் நிகழ்கின்றன. கனவுகளை விற்று பணம் பண்ணும் தொழில் நிகழுகிறது.
இந்த தொழில் ஐரோப்பா, வட அமெரிக்கா, இலங்கை , இந்தியா என ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் நிலையாக மாறியுள்ளது.
எதார்த்தமான தீர்வுகளை எட்டுவதற்கு இது தடையாகவே அமையும். உள்ளுர் தமிழர்களுக்கு எத்தகைய விமோசனமும் கிட்டாமல் செய்வதில் இவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.
புலிகளின் பிரதான பிரிவினர் அழிந்து விட்டனர். ஆனால் புலிகளைச் சொல்லி நிகழும் அரசியல் பெருச்சாளிகள் சார்ந்தது. இது பெரும் களவாணித் தொழில்.
உயிரை அர்ப்பணித்தவர்களின் உற்ற சுற்றத்திற்கோ பேரழிவைச் சந்தித்த சமூகத்திற்கோ இது எதுவித பிரயோசனமும் அற்றது.
தமிழுணர்வு ,எழுச்சி விடுதலையின் பெயரால் நிகழும் வியாபாரம். மாபியா வியாபாரம்.
No comments:
Post a Comment