புலிகள் பொல்பொட் அமைப்புபோல் செயற்பட்ட காலத்தில் த.தே.கூ மௌனம் காத்தது.
முன்னாள் இந்து ஆசிரியர்.
புலிகள் அமைப்பு, 'பொல்பொட்' குழுவைப்போன்று செயற்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சத்தமின்றி இருந்து வந்தது எனவும் புலிகள் சொல்வதையெல்லாம் செய்து வந்தது என்றும் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என் ராம் தெரிவித்துள்ளார். இலங்கையின் பத்திரிகையாளர்களை புதுடில்லியில் வைத்து சந்தித்த போதே இந்த கருத்துக்களை ஆசிரியர் ராம் வெளியிட்டுள்ளார்..
மேலும் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு நாட்டிலும் சென்று அரசியல் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. த.தே. கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்து தமதுபிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுதல் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான தற்போதுள்ள இலங்கை அரசாங்கத்தை போன்று எந்தவொரு அரசாங்கமும் இலங்கையில் சிறப்பாக ஆட்சி செய்ததில்லை என்றும் இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண த.தே.கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் தலைவர்களே எதிரிகள் என்றும் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வை காணமுன்வர வேண்டும் என்றும் ராம் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment