Wednesday, December 19, 2012

திஸ்ஸமஹாராம விகாரைப் பகுதியில் இறால் மழை பெய்துள்ளது.

திஸ்ஸமஹாராம விகாரைப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இறால் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நாட்டின் பல பாகங்களிலும் சிவப்பு மழை மற்றும் மீன் மழை பெய்து வருகின்ற நிலையியே திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இறால் மழை பெய்துள்ளது..

திஸ்ஸமஹாராம விகாரைப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இந்த இறால் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தபோதும் இதனை உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இதேவேளை இந்தியாவிலும் மஞ்சள் மழை பெய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment