பிரதம நீதியரை விசாரிக்க பொதுநலவாய சுயாதீன குழுவை நியமிப்பீர் என்கிறது எதிர்கட்சி.
எந்த வகையில் நியாயம்? என்கிறது ஆழும் கட்சி
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு பொதுநலவாய நீதியரச்ரகள் மூவர் அடங்கிய சுயாதீன குழுவொன்றை நியிமகிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை ஒன்றின் ஊடாக வேண்டுதல் விடுத்துள்ளது. இவ்வறிக்கை தொடர்பில் பதிலளித்துள்ள அரசாங்கம் இது எந்த வகையில் நியாயம் என்று கேட்டுள்ளது.
இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, 1980 ஆம் ஆண்டு திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை நீக்குவதற்கு முன்னாள் நீதியரசர்களான ஜே.ஜி.ரி.வீரரத்ன, எஸ்.சர்வானந்தா, ஈ.சி.இ.டி அல்விஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். உச்ச நீதியமன்றத்திற்கு கூட இல்லாத அதிகாரிகள் இந்த ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும் தயவு செய்து உச்ச நீதிமன்ற நீதியரசர்களையேனும் நியமியுங்கள் என்று திருமதி பண்டாரநாயக்க அன்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி அதற்கு எந்தவித சாதகமான பதிலையும் வழங்கியிராத அக்கட்சி இன்று இவ்வாறானதோர் கோரிக்கையை விடுப்பது எந்த வகையில் நியாயம் என இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 comments :
Internal problem always should be solved internally.Impartial committee
can make the correctdecision.calling for a third party from out side would affect the country's reputation
very badly
Post a Comment