Tuesday, December 4, 2012

பாராளுமன்ற குற்றப் பிரேரணை இயற்கை நீதிக்கு மாறானது நீதிபதிகள் சங்கம் அறிக்கை

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை, இயற்கை நீதியை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது. குற்றப்பிரேரணை செயன்முறைகளால் நாம் விசனமடைந்துள்ளோம்.பிரதம நீதியரசருக்கும் நீதித்துறைக்கும் எதிரான அவதூறுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என நீதிபதிகள் கூட்டறிக்கையென்றை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு, ஹல்ஸ்டொப்பில் நேற்று கூடிய குற்றப்பிரேரணை விவகாரம் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள், தொழில் நியாய சபைகளின் தலைவர்கள் அடங்கலான நீதித்துறை உத்தியோகஸ்தர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரதம நீதியரசருக்கும் நீதித்துறைக்கும் எதிராக விடுக்கப்படும் அவதூறான ஊடக அறிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான அறிக்கைகள் காரணமாக நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்படும் பாரிய கேடுகளை உரியவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றங்களை சுமத்தியவர்களே அதை விசாரிப்பவர்களாகவும் உள்ளனர். இது இயற்கை நீதிக்கு முரணானது. குற்றஞ்சாட்டுபவர்களே விசாரணை மேற்கொள்வது உலகில் வேறு எங்குமே காணமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment