Tuesday, December 25, 2012

ஐ.தே.கட்சித் தலைவராலோ பிரதித் தலைவராலோ ஆட்சியைக் கவிழ்க்க முடியாது!

மேலெழும் எல்லாப் பிரச்சினைகளும் ஜனாதிபதியிடமே செல்ல வேண்டும்!

(கலைமகன் பைரூஸ்)
இந்த அரசை கவிழ்க்க வேண்டுமாயின் நாம் நம்மையே தூற்றிக் கொண்டிருக்காமல், இடம்பெறும் எல்லாவற்றுக்கும் பொறுப்புச் சொல்ல ஜனாதிபதியிடம் விட்டுவிட வேண்டும் என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நடைபெறும் சகல பிரச்சினைகளுக்கும் விடையளிக்க வேண்டிய பொறுப்பை ஜனாதிபதியிடத்தில் முன்வைத்து, அரசியலை ஆட்டம் காணச் செய்வதற்கான திட்டமொன்றை மேலெழுப்புதற்கு ஐ.தே.க. தயார்நிலையில் இருப்பதாகவும் நம்பத் தகுந்த செய்திகள் அறிவிக்கின்றன.

சென்ற வாரம் அரச அச்சகக் கூட்டுத்தாபன ஐ.தே.க. அநுசரணையில் தொழிற்சங்க சம்மேளனத்தின் 45 ஆவது ஆண்டுவிழா ‘ஸ்ரீகொத்த’ ஐ.தே.க. தலைமையகத்தில் நடைபெற்ற போது, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜோசப் மைக்கல் பெரேரா, பொதுமக்கள் ஜனாதிபதிமீது அவநம்பிக்கை கொள்ளுதற்கான செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதுபற்றி நீண்ட உரை நிகழ்த்தியிருக்கிறார்.

ஜனாதிபதி மீதும் ஆட்சிமீதும் பொதுமக்களுக்கு அதிருப்தியை உண்டுபண்ணும் இந்தச் செயற்பாட்டிற்கே முழு உற்சாகம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறின்றி இந்தப் பலம்பொருந்திய அரசை ஐ.தே.க. தலைவராலோ, பிரதித் தலைவராலோ இல்லை ஐ.தே. கட்சியினால் முடியாது என்றும் அதற்காக அரச தலைவருக்கு எதிராகச் செயற்படுத்த வேண்டிய செய்கைகளைத் துரிதமாக்க வேண்டுமென்றும் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐதே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட பலர் கலந்து கலந்துகொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com