சட்டத்தரணிகள் சங்கத் பிரதித் தலைவர் ராஜினாமா?
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித்தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அனோமா குணத்திலக்க தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துக்கொள்ளப்போவதாக இன்று அறிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களை எதிர்த்தே தான் பதவிவிலகுவதற்கு தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த தீர்மானங்கள் பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் பலவந்தமாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment