Monday, December 10, 2012

துமிந்தவை கைது செய்-இல்லை கொலன்னாவை மீண்டும் போர்க்களமாகும் ஹிருணிக்கா

முல்லேரியா துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படாவிடின், மீண்டுமொரு போர் இடம்பெறும் என ஹிருணிக்கா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

அவ்வாறு கைது செய்யப்படாவிடின், கொலன்னாவைப் பகுதி போர்க்களமாக மாறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com