தன்னாட்சி பெற அனைத்து மாநிலங்களும் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் : பிரணாப் முகர்ஜி
டெல்லியில் கூட்டுறவு சங்க பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கூட்டுறவு சங்கங்கள் தன்னாட்சி பெற அனைத்து மாநிலங்களும் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.மேலும் அவர் பேசுகையில் கூட்டுறவு சங்கங்கள் தன்னாட்சி பெற்று செயல்பட சட்டம் 97 ன் கீழ் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இந்த கூட்டுறவு தன்னாட்சியை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல அந்தந்த மாநில அரசுகள் சட்ட திருத்தம் மேற்கொள்ளவேண்டும். கூட்டுறவு சங்கங்கள் பொருளாதார வளர்ச்சி பெற இந்த சட்ட திருத்தம் மிக அவசியமானது என்றும் கூறியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment