இந்திய கிரிக்கெட் வீரர்களின் மோசமான ஆட்டத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் மேட்சில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொல்கத்தாவில் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் உருவ பொம்மையை எரித்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் மேட்ச், கடந்த புதன் அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது.
ஆரம்பம் முதலே மோசமாக விளையாடி வந்த இந்திய அணி, இன்று மோசமான தோல்வியைத் தழுவியது.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், இந்திய கிரிகெட் வீரர்களின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதன் மூலம் கொல்கத்தா டெஸ்ட்டில் இங்கிலாந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையே 13 ஆம் திகதி நடக்கவுள்ள கடைசி டெஸ்ட் மேட்சுக்கான இந்திய ஆட்டக் கள வீரர்களைத் தேர்வு செய்யும் பணிகளும் தற்போது துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
0 comments :
Post a Comment