பலஸ்தீனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் மஹிந்த ராஜபக்ஷ
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பலஸ்தீன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நீண்டகால நட்பு நாடான பலஸ்தீன் பெற்றுள்ள இவ்வெற்றி, தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். பலஸ்தீன் ஸ்தாபகரான யாசிர் அரபாத் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பராவார்
இலங்கை பலஸ்தீன் நட்புறவை கட்டியெழுப்புவதற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீண்டகாலமாக பங்களிப்புகளை வழங்கியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அங்கீகாரம், பலஸ்தீனத்தின் நல்லெதிர்காலத்திற்கு சிறந்த நல்லறிகுறியென, ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
1970 களில் இளம் பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி இருந்த போது, பலஸ்தீன் உரிமைகள் தொடர்பாக, பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார். பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்றுக்கொள்வதற்கான முயற்சியில், இலங்கையும் விசேடமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளார் என்பது, வரலாற்று உண்மையாகும்.
இதன் பிரகாரம், பலஸ்தீன், இறைமைமிக்க நாடாக சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது, இலங்கை பெற்ற பெரு வெற்றியெனவும் குறிப்பிடலாம்.
0 comments :
Post a Comment