Friday, December 28, 2012

நாடாளுமன்றத்தை கலைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

நாடாளுமன்றத்தை கலைப்பதன் மூலம் தற்போது நாட்டில் எழுந்துள்ள நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான முறுகலை தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற கலைப்பு யோசனையை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, மற்றும் டியூ குணசேகர ஆகியோர் ஜனாதிபதியிடம் விடுத்திருந்த யோசனைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

நாட்டில் எழுந்துள்ள நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான முறுகலை தவிர்க்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், அது பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் விசாரணையை உரியமுறையில் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மீது நம்பிக்கையில்லாமல் போயுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் பிரதம நீதியரசர் தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணையை ஏற்று நாடாளுமன்ற சபாநாயகர், மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் சமுகமளிக்க வேண்டும் என்றும் சுமந்திரன் கோரியுள்ளார்.

எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment