இந்திய வீட்டுத் திட்ட குளறுபடிகளைக் கண்டித்து மன்னாரில் மக்கள் ஆர்ப்பாட்டம்
இந்திய வீட்டுத் திட்டத்திலுள்ள குளறுபடிகளைக் கண்டித்து மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்திய வீட்டு திட்டம் அநீதியான முறையில் பகிரப்பட்டுள்ளமையினை கண்டித்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாலேயே இவ் ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு மற்றும் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் ஆகியன இணைந்து உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து பல இன்னல்களை கடந்து தற்போது மீள்குடியேறிய மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட வீட்டு திட்டத்தின் பயனாளிகள் தேர்வில் இடம்பெற்ற அநீதியை சுட்டிக்காட்டியும் நீதியான முறையில் பகிர்வுகள் இடம்பெற வேண்டும் என வழியுறுத்தியுமே இந்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.
அதேபோல் யுத்தத்தில் இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறி தொழில் துறைகளை இழந்த மீனவர்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட மீன்பிடி படகுகளையும் உபகரணங்களையும் வழங்குவதில் காட்டப்படும் பாரபட்ச செயற்பாடுகளை கண்டித்தும் அவற்றின் தெரிவிலும் விநியோகத்தில் சீர்செய்யுமாறு இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது கோரப்பட்டது.
இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களையும் சேர்ந்த பல நுர்ற்றுக்கணக்காண மக்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று; மன்னார் மாவட்ட செயலாளரிடம கையளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment