ராயப்பு ஜோசப் அவர்களின் கடிதத்திற்கு தந்தை நிகொலஸ் செல்வராஜா பதில் .
சர்சைக்குரிய நபர்களால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம்.
நயவஞ்சகர்களின் பேச்சுக்கு மயங்கி, சொகுசான வாழ்கையை கனவு கண்டுக்கொண்டு எந்தவித பாதுகாப்பும் அற்ற மீன்பிடி கப்பல்கள் மூலம் நீண்ட தூரம் ஆபத்தான கடற் பயணங்களை சில மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். பணப் பேராசை பிடித்த சிலரும் ஆட்கடத்தர்காரர்களும், மக்களை ஏமாற்றி சிறந்த தொழில்களை பெற்றுத்தரவதாக கூறி பல இலட்சக்கணக்கான பணங்களை பெற்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏனெனில் எந்தவொரு நாடும் உரிய காரணங்களுடன் சட்ட ரீதியான குடியேற்றங்களுக்கே அனுமதிப்பதே தவிர, சட்டவிரோதமான குடியேற்றங்களுக்கு அனுமதிப்பதில்லை.
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு பலர் சட்டவிரோதமாக செல்ல முயற்சிக்கின்றனர். இவர்களில் சிலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் அவுஸ்ரேலிய அதிகாரிகளால் கைதுசெய்யப்படுகின்றனர். அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு இது பாரியதொரு பிரச்சனையாக மாறியுள்ளது. அந் நாட்டு சட்டத்தின்படி இவ்வாறு சட்டவிரோதமாக அங்கு செல்பவர்கள் நாவுறு மற்றும் பாப்புவா நியூகினி தீவுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்கள் பொருளாதார தேவைகளை நாடியே அன்றி வேறு எக் காரணத்திற்காகவும் அவுஸ்ரேலியாவுக்கு வரவில்லை என அவுஸ்ரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 3 தசாப்த காலமாக நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இனங்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினையினால் எண்ணற்ற அழிவுகள் ஏற்றப்பட்டன. பயங்கரவாத ஆதரவு சக்திகள் அன்று முதல் இன்று வரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றன. இதில் பிரதானமாக உள்நாட்டில் இருந்த வண்ணம் சர்ச்சைக்குரிய நபர்களாக செயற்படுவர்களின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுபவர்கள் தமது கூற்றை நிரூபிக்கும் நிலைபாட்டிலும் இருக்க வேண்டும்.
வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப், தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்காக உழைத்த ஒருவராவார். இவரால் வெளியிடப்படும் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைவராலும் விமர்ச்சிக்கப்படுபவையாக அமைந்திருக்கும். யுத்தத்தின் போது பழிவாங்கும் நோக்குடன் காணாமற் போன 146,000 பேருக்கு காரணம் அரசாங்கம் என குற்றச்சாட்டினார். ஆனால், படையினர் முன்னேறிச் சென்றுகொண்டிருந்த வேளை விடுதலைப்புலி இயக்கம் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி பலரை கொண்டனர் இது தொடர்பாக அவர் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. இவர் விடுதலைப்புலிகள் செயற்பாடுகளுக்கெதிராக இதுவரைக்காலமும் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைவிட படையினர் புனித மடுமாதா தேவாலயம் உட்பட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வேலையில் இவர் இராணுவத்திற் கெதிராக கூக்குரல் இட்டமை குறிப்பிடத்தக்கது. மடுமாதா தேவாலயமானது விடுதலைப்புலிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் அங்கு பதுங்கு குழிகள் அமைத்து, அங்கிருந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர் என்பதை யாவரும் அறிவர்.
இவர் தன்னிச்சையாக தனது விருப்பத்துடன் மட்டும், புனித மடுமாதா சிலையை அதன் பாதுகாப்பான புனித இடத்தில் இருந்து அகற்றி பயங்கவாத அச்சுறுத்தல் கூடுதலாக நிலவிய பிரதேசத்திற்கு கொண்டு சென்ற வேளை, இவரது இரட்டை வேடம் மற்றும் விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கான ஆரதவு போன்றவை உலகிற்கு தெட்டத் தெளிவாக விளங்கியது.
நீண்டகாலமாக இலங்கை அனுபவித்து வந்த யுத்தத்தின் கொடுமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இத்தருவாயில் ஆண்டகை ராயப்பு யோசப் போன்றோர் நாட்டின் மக்களிடையே சாமாதனத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை மேலோங்கச் செய்ய முன்னிற்க வேண்டியவர்களாவார்கள்.
அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 14ஆவது அனைத்துலக ஆவர்த்தன பரீசிலனை கூட்டதில் இவர் 'ஸ்கைப்' ஊடாக தொடர்பு கொண்டு நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், மிகுந்த தியாகத்துடனும், கடுமையான உழைப்பினாலும் வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை சீர்குழைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இவர் வெளியிட்ட கருத்துக்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவையும், எவ்வித சாட்சியங்களும் அற்று நிரூபிக்கப்படாதவையாகவும் ஆகிவிட்டன.
இதைத்தவிர அண்மையில் இவர் அவுஸ்ரேலியாவுக்கு ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவுஸ்ரேலியாவுக்கு வருபவர்களை திருப்பியனுப்ப வேண்டாம் என்றும், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரால் இவர்களுக்கு தீங்கு இழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார. உயிரை பணயம்வைத்து மேற்கொள்ளும் ஆபத்தான கடற் பயணங்களை இவரது கடிதம் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.
விடுதலைப்புலிகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ள இத் தருவாயில், நாட்டின் சமாதானத்துக்கு ஊறு விளைவிக்கின்ற கருத்துக்களை வெளியிடாமல் தம்மை பின்பற்றுபவர்களுக்கு ஆன்மீக ரீதியான சுகவாசத்திற்கான நிலைமையை ஏற்படுத்துவதே காலத்தின் தேவையாகும்.
1 comments :
There is a limit to the spiritual leaders.Politics is completely a different matter from spirituality.We wonder how this repected Rev Bishop mix the spirituality with the politics and makes the country's reputation into the lower level.Please do pray His almoghty Lord Jesus for His richest blessings to our beloved country Srilanka.
Post a Comment