Tuesday, December 25, 2012

தியவன்னா ஓயாவில் மிதக்கும் உணவகம்

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம், கடற்படையின் கரையோர பாதுகாப்பு, பிரிவினால் தியவன்ன ஓயாவில் புதிதாக மிதக்கும் சிற்றூண்டிச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் கொழும்பு நகரை அழகுப்படுத்தும் மொரு முயற்சியாக 52 பேர் பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் சிற்றூண்டிச்சாலை தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும், பின்னர் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையும் தியவன்னா ஓயா முதல் வோட்டஸ் ஏஜ் வரை இந்த மிதக்கும் சிற்றூணடிச்சாலை சேவையில் ஈடுபடும் என இதனை பராமரித்து வரும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதன் சேவையை முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டுமானால் 0112 863 863 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம்.

இந்த மிதக்கும் சிற்றூண்டிச்சாலையை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார் இந்த விழாவில் கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே, பாதுகாப்பு படைகளின் பிரதாணி ரொஷான் குணதிலக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment