இணையத்தகவல் பாதுகாப்பை விஸ்தரிக்க வேண்டும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ
தற்காலத்தில் மிக வேகமான வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பத்தில் இணையத் தகவல்களைப் பாதுகாப்பு தொடர்பான அறிவை விஸ்தரிக்க வேண்டும். இதன்மூலம் இணையத்தளங்களினுடாக ஏற்படும் அபாயங்களிலிருந்து நாட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இணையத்தகவல் பாதுகாப்புக்கான 5ஆவது வருடாந்த தேசிய மாநாடு கடந்த 05ஆம் திகதி , கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தாக்குதல்கள் இடம்பெற்ற பின் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பயனில்லை. அதற்கு முன்னரே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் முக்கியமானது.
தற்போது, பாடசாலை மாணவர்களிடையே தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ரீதியிலான விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டல் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.
0 comments :
Post a Comment