நிதித்துறை மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்படின் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். மஹிந்தர்.
நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும், கௌரவத்திற்கும் பங்கம் ஏற்படும் பட்சத்தில், நாட்டின் நிர்வாக செயற்பாடுகளில், பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமென ஜனாதிபதி கூறியுள்ளார். மினுவாங்கொட பிரதேச சபை கட்டிடததை திறந்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகிய மூன்று துறைகளும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே செயற்பட வேண்டும். எவரினதும் குறறச்சாட்டுக்களுக்கு உட்படாதவாறு, கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ள, நீதித்துறை செயற்பட வேண்டுமென்றார்.
அன்று ராணுவத்தினரை இருவேறு கூறுகளாக பிளவுபடுத்த முயற்சித்ததுபோன்று, இன்றும் நீதித்துறையினை பிளவுபடுத்தி, அரசியல் மயப்படுத்தும் முயற்சிகள், நாட்டில் இடம்பெறுவதா தெரிவித்த ஜனாதிபதி ஜனநாயக ரீதியில் தெரிவான ஆட்சியை கவிழ்ப்பதற்கு, தேசப்பற்றுள்ள மக்கள், என்றுமே இடமளிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதே, எமது நோக்கம். அபிவிருத்தியின் பயன்களை, என்னை விட நீங்களே நன்கு உணர்கிறீர்கள். அது தொடர்பாக உங்களிடமே சிறந்த விளக்கம் இருக்கின்றது. இந்த அனைத்து அபிவிருத்திகளும், இந்நாட்டின் இளம் சந்ததியினருக்காகவே, நாம் மேற்கொள்கிறோம். அவர்களது எதிர்காலத்தை ஒளியமாக்குவதே, எமது நோக்கமாகும். நாம் ஏன் இவ்வாறு துறைமுகங்களை அமைக்கின்றோம், விமான நிலையங்களை அமைக்கின்றோம் என, கேள்வி எழுப்ப முடியும். ஏன் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றோம் என்றும் கேள்விகளை கேட்கலாம். இன்று எமக்கு அனுபவிக்க முடியாத இதன் பயன்களை, நாளை எமது சந்ததியினருக்கு அனுபவிப்பதற்கு, வாய்ப்பு கிடைக்கும்.
இந்நாட்டை, மக்களுக்கு வாழக்கூடிய சிறந்த வசதிகள்மிக்க தேசமாக மாற்றியமைப்பதே, மஹிந்த சிந்தனையின் அடிப்படை நோக்கமாகும். எமக்கு நாட்டை அபிவிருத்தி செய்யும்போதும், திட்டங்களை வகுக்கும்போதும் தடைகள் ஏற்படுகின்றன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலும், இவ்வாறான தடைகளை நாம் சந்தித்தோம். குற்றச்சாட்டுக்கள் உட்பட குறைகளும் கூறப்பட்டன. அபிவிருததி செயற்பாடுகளை முடக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நாட்டின் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை, மக்களின் தேவைகளை உணர்ந்து, செயற்பட வேண்டும். அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது, அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும். தாம் அதிகாரத்திற்கு கொண்டுவந்த அரசாங்கத்தை, அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ள அரசாங்கத்தை பதவிகவிழ்க்க, எக்காரணம் கொண்டும் புத்திசாதூரியமிக்க எமது நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். ஜனநாயக ரீதியிலான ஆட்சியினை கவிழ்க்க, இந்நாட்டு மக்கள் தயாரில்லையென்பதனையும், நான் உறுதியாக கூறுகின்றேன். இது தொடர்பில், எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. )
ஜனாதிபதியின் ஆலோசகர் சங்கைக்குரிய மெதகமுவே விஜய மைத்திரி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, பீலிக்ஸ் பெரேரா, பிரதியமைச்சர்களான பண்டு பண்டாரநாயக, துலிப் விஜேசேகர, லசந்த அழகியவன்ன, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரணதுங்ண, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளெ உள்ளிட்டோரும், கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment