தெரிவுக்குழு விடயங்களை ஊடகங்கள் பகிரங்கப் படுத்த முடியாது- தடுக்க அரச தரப்பு கோரிக்கை
நிலையியற் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தெரிவுக் குழுவில் ஆராயப்படும் விடயங்களை ஊடகங்களுக்கு வழங்க முடியாது. ஆனால் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் குற்றப் பிரேரணை விசாரணை விடயங்கள் அனைத்தும் ஊடகங்களில் வெளிவருகின்றன. இவ்வாறு ஊடகங்களில் வெளியிடுவது சிறப்புரிமை மீறலாகும் தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியபோது அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா சிறப்புரிமை மீறல் பிரச்சினையான மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் ஊடக வழிகாட்டல் நெறிமுறை அவசியம் .இது தொடர்பாக சபாநாயகர் நெறிமுறையொன்றை வழங்க வேண்டும்.
தெரிவுக் குழுவின் மூலம் நடத்தப்படும் விசாரணையின் விபரங்கள் வெளியிடப்படாமல் இரகசியம் பேணப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும் சகல ஊடகங்களில் அனைத்தும் வெளிவருகின்றன.
இதேவேளை தெரிவுக் குழு விசாரணைகளை ஊடகங்களுக்கு திறந்துவிட வேண்டும் என எதிர்க் கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் மூலம் தவறான செய்திகள் பிரசுரமாவதை தடுக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
0 comments :
Post a Comment