Monday, December 17, 2012

கனடா இரு புலிப்பயங்கரவாதிகளை நாடு கடத்துகின்றது.

கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள புலிகளியக்கத்திற்கு ஆயுதம் வாங்க முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ள புலிப்பயங்கரவாதிகள் இருவரை கனடா நாடுகடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றது.

இலங்கையைச் சேர்ந்த புலிச் சந்தேக நபர்களான பிரதீபன் நடராஜா மற்றம் சுரேஸ் சிறிஸ்கந்தராஜா ஆகிய இருவரையும் அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என கனேடிய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதீபன் நடராஜா என்பவர் ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகள் போன்றவற்றை தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கறுப்புச் சந்தையில் கொள்வனவு செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா, நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பம் தொடர்பான மென்பொருளை புலிகளின் சார்பில் கொள்வனவு செய்ய முயற்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் எப்போது நாடு கடத்தப்படுவார்கள் என்பது பற்றிய தகவல்களை அந்நாட்டு அரசாங்கம் இதுவரையில் வெளியிடவில்லை. விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஓகஸ்ட் 2006 ம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்ட இரு தமிழ் இளைஞர்களின் மேல் முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.

பிணையிலிருந்த சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவை கனடிய காவல்துறையினர் சரணடையுமாறு கேட்டத்திற்கிணங்க சரணடைந்த அவருக்கு பயங்கரவாதம் குறித்த கனடிய சட்டம் சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, அந்த சட்டத்தை எதிர்த்து முறையீடு செய்த இவர்களின் மனுக்களை நிராகரித்துள்ளது.

தங்கள் கடைசி மேல் முறையீட்டில் தோற்றுவிட்டதனால் பிரதீபன் நடராஜாவும் சுரேஷ் சிறிஸ்கந்தராஜாவும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது அமெரிக்காவில் இருக்கும் குற்றத்துக்காக நியுயோர்க் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படலாம். இதற்காக இவ்விருவரும் விரைவில் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருவரும் அமெரிக்க எப்பிஐ யிடம் ஆயுதம் வாங்க முற்பட்டு மாட்டிக்கொண்டவர்கள். 2002 ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் தலைமையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் ஆயுதக்கொள்வனவு கட்டமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. மாற்றங்கள் நிரந்தர மாற்றத்திற்கு வழிவகுத்தது. காட்டிக்கொடுப்புக்கள் என்றால் உங்கவீட்டு காட்டிக்கொடுப்பு எங்கவீட்டு காட்டிக்கொடுப்பு அல்ல அது புலிகளின் உள்வீட்டு காட்டிக்கொடுப்பு.

ஆனால் இன்று யார் குற்றியாகியும் அரிசியாகிவிட்டது புலிச்சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்ற நிம்மதி பெருமூச்சுடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

4 comments :

Anonymous ,  December 17, 2012 at 4:05 PM  

சந்தர்ப்பம் பார்த்து சொந்த மண்ணை விட்டு சுயநலத்துடன் கனடாவுக்கு வந்திருந்து, முதற்படியாக கனடா குடியுரிமையையும் பெற்றுக்கொண்டு, தமிழை விட்டு ஆங்கிலத்தில் வாழும் உங்களுக்கு தமிழீழம் எதற்கு?
தமிழீழம் கிடைத்தால், நீங்கள் எல்லோரும் அங்கு போய் வாழவா போறீர்கள்?
சரி இங்கு உங்களின் சுப்பர் சுயநலத்தில், பிறந்த மண்ணை, சொந்த பந்தங்களை, தாயகத்தை, தமிழினத்தை தவிர்க்கவிட்டு வெறும் கோழைகளாக, பணதிக்கும், சொகுசுக்கும் அந்நியனுக்கு அடிமையாக, சேவகனாக
வாழும் உங்களுக்கு ஏன் தேவையற்ற வேலைகள்? ஏன் அழிவுக்கு மட்டும் உதவ யோசிககிறீர்கள்??
சரி அங்கு வாழ்கையில் கிடைக்காத படிப்புகள், சந்தர்ப்பங்கள் இங்கு உங்களுக்கு கிடக்கின்றன. அதை பாவித்து இனியும் ஒரு நல்ல மனிதர்களாக, நல்ல இனமாக நல்லதை சிந்தித்து, அழிந்து, அகதிகளாக, அனாதைகளாக போயுள்ள உங்கள் தாயகத் தமிழருக்கு உதவிகளை செய்யலாம் தானே?

Anonymous ,  December 17, 2012 at 6:53 PM  

இது பயங்கரவாதிற்க்கு எதிரான கனடாவின் நடவடிக்கை.

Anonymous ,  December 17, 2012 at 10:03 PM  

There are some undesirable elements in foreign countries who cry for unimaginable tamil state in Srilanka
are the very notorious and unbelievable opportunists who sell the Srilanka's tamil women , widows,girls orphans handicapped and fill their stomach.Crocodile tears is the easy to live and enjoy the life.

Anonymous ,  December 18, 2012 at 12:08 AM  

அந்நியனுக்கு அடிமையாக, சேவகனாக மட்டுமல்ல கோப்பையும் குண்டியும் கழுவி விடுகினும் , சீச்சீ

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com