புகை மனிதனுக்கு பகை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிப்படைகின்றது என சமீபத்தில் இடம்பெற்ற ஆய்வொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தம் அதிகமாக உள்ள இளைஞர்களே அதிகளவில் புகைப்பிடிப்பதபகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைபிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தம் உள்ள இளைஞர்களே அதிகம் புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமையாகின்றார்கள் என ஆய்வில் தெரியவந்தது. ஆனால் புகைப்பழக்கம் மன அழுத்தத்தை அதிகரித்து மனநல பாதிப்புகளுக்கு உள்ளாக்கிறது. புகைப்பழக்கமே குடிப்பழக்கத்திற்கு வழிவகுக்கிறது என்பது மருத்துவர்களின் கருத்து.
புகைப்பழக்கத்திற்கு அடிமையாபவர்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய், ஆண்மைக்குறைவு போன்ற நோய்கள் ஏற்படும் என்பது தெரிந்த விஷயம் ஆனால் அவர்களின் மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றையும் குழந்தைகளுக்கு காதுகோளாறு போன்றவற்றையும் ஏற்படுத்த வாய்பிருக்கிறது.
புகைப்பழக்கத்தில் இருந்து மீள மனரீதியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்
No comments:
Post a Comment