தமிழகத்தின் காவிரிக்கு தண்ணீர் திறந்து விட்டது கர்நாடக:மாண்டிய விவசாயிகள் போராட்டம்
நேற்று பிற்பகல் உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீர் வரும் ஞாயிறு வரை திறந்து விடவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
அதன் படி நேற்று இரவு கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மாண்டியா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
கர்நாடகத்தின் மாண்டியா மாவட்ட விவசாயிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் கர்நாடக அரசின் செயலையும் கண்டித்து இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. சத்திய மங்கலம், கர்நாடகா தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பன்னாரி சோதனை சாவடியிலேயே நிறுத்தப் பட்டுள்ளதாகவும் கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப் படவில்லை என்றும் தெரிய வருகிறது. இதனால் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருவதாகவும் அறியப்படுகிறது.
கர்நாடக அரசு, இரவோடு இரவாக தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை வன்மையாக கண்டித்து இந்த முழு அடைப்புப் போராட்டத்தை இன்று நடத்துவதாகவும் மாண்டியா மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதை அடுத்து கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது
0 comments :
Post a Comment