Saturday, December 22, 2012

அமெரிக்க புதிய வெளியுறவுச் செயலாளராக ஜோன் கெரி தெரிவு

அமெரிக்கா புதிய வெளியுறவுத்துறை செயலாளராக அமைச்சர் ஜோன் கெரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். ஹிலாரி கிளிண்டன் பதவி விலகுவதை தொடர்ந்தே ஜோன் கெரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ஒபாமாவின் முதல் நான்கு ஆண்டு ஆட்சியில் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத் துறைச் செயலாளராக பணியாற்றினார்.

ஜனாதிபதி ஒபாமாவின் வலது கரமாக இருந்து உலக நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை வலுப்படுத்தியது மட்டுமன்றி உலக அளவில் கிளின்டன் பெரும் புகழ் பெற்றிருந்தார்.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்;கு வசதியாக இரண்டாவது முறையாக ஹிலாரி பதவியை தொடர விரும்பவில்லை என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், தன்னை தேசிய அரசியலில் அறிமுகப்படுத்திய 'குரு' என்று கருதும் ஜோன் கெரியை அமெரிக்கா புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி ஒபாமா வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com