Friday, December 7, 2012

பொலிஸாரைக் கண்டதும் மதிலை உடைத்து வானை வேகமாக வீட்டிற்குள்ளே செலுத்திய சாரதி

பொலிஸாரைக் கண்டதும் தலைதெறிக்க வாகனத்தைச் செலுத்தி சாரதி ஒருவர் இரண்டு பொது மக்களை இடித்து தள்ளியதோடு வீட்ச் சுவர்களையும் இடித்து தள்ளி பாரிய விபத்தினை உண்டாக்கிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் யாழ். மல்லாகம் சந்தியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் சந்தியில் வழமையாக பொலிஸார் எந்நேரமும் கடமையில் இருப்பார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாகம் நோக்கி சென்ற வான் ஒன்று அங்கு கடமையில் நின்ற பொலிஸாரை கண்டதும் மிக வேகமாக செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது எதிரே சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாயொருவரும் அவரின் 4 வயதுடைய மகனையும் குறி;த்த சாரதி இடித்து தள்ளியுள்ளார். இதில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த வீட்டு மதில் சுவரையும் இடித்து வீட்டினுள் வாகனம் நுழைந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் நின்ற மல்லாகம் பொலிஸார் வானின் சாரதியைக் கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

1 comments :

Anonymous ,  December 7, 2012 at 9:32 PM  

Please do have a medical check up before you give them the driving licence.
Mentally handicapped person also
has the possiblity of obtaining a driving licence which could be a severe threat to the pedestrians,traffic systems etc etc.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com