Monday, December 17, 2012

இந்திய இராணுவ தளபதி தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் குழு இலங்கை விஜயம்.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் தலைமையிலான சிரேஷ்ட இந்திய இராணுவ அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை 19 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக இராணுவத்தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த தூதுக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங் வவுனியாவிலுள்ள படைத்தலைமையகத்திற்கும் முன்னாள் போராளிகளின் புனரவாழ்வு நிலையம் அமைந்துள்ள பூந்தோட்டத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். அதனை தொடர்ந்து அனுராதபுரத்திலுள்ள புராதன சின்னங்களையும் பார்வையிடவுள்ளார்.

மேலும் தியத்தலாவ பயிற்சி கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறுகின்ற படையினரின் அணிவகுப்பு மரியாதை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற விருக்கின்றது. அந்த வைபவத்திலும் அவர் பிரதம அதிதியாக கலந்துக்கொள்வார். இதில் 18 பெண்கள் உட்பட 157 அதிகாரிகள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ளனர். பெண்களில் மாலைத்தீவு நாட்டை சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். இந்த 157 அதிகாரிகளுக்கும் இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங்கே பதக்கங்களை அணிவிப்பார்.

அடத்து 23 ஆம் திகதி கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் செய்யும் இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினர் தங்களுடைய விஜயத்தை முடித்துக்கொண்டு அன்றைய தினமே நாடு திரும்புவர் என்றும் இராணுவத்தலைமையகம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com