தமிழ் பத்திரிகைகள் தன்னை இனவாதி என வர்ணிக்கின்றனவாம். அழுகின்றார் வீரவன்ச.
நாட்டில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் தன்னையொரு சிங்கள கடும் போக்குடைய இனவாதி என்ற கோணத்தில் சித்தரிப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்லூரி அதிபர் திருமதி ஜெயராணி தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு வீரவன்ச மேலும் கருத்து தெரிவிக்கையில் பத்திரிகைகளுக்கு சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் உண்டு. எனினும் தான் சகல சமூகங்களினதும் சமயம், கலை, கலாசாரம், மொழி அனைத்தையும் மதித்து சமமாக எனது சேவையை வழங்கி வருகின்றேன். அமைச்சு பொறுப்பை ஏற்றவுடன் வடக்கிற்கு சென்று, மன்னார் மாவட்டத்திலிருந்து அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்தேன். அங்கு தமிழ் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்தேன் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அமைச்சரினால் பரிசில்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
1 comments :
There is nothing to worry,there were condemnations against Lord Buddha,Lord Jesus & Mahatma Ghandhi
Holy Bible says before you take out a little dirt from other's eye.You try to take out the log from your eye.We should know that we need genuine journalism.
Post a Comment