பிரத நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சட்டத்தரணிகள் சங்கம் நிரகரிப்பு
இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி விலகப் போவதில்லை. எத்தகைய சவால்களையும் சந்திப்பதற்கு அவர் தயாராக உள்ளார் என்று அவரது சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.பிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக் குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாம் முற்றாக மறுக்கின்றோம். அந்தக் குற்றச் சாட்டுகளையோ அல்லது முடிவினையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.இவ்விடயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment